T24 Tamil Media
இலங்கை

தனிமைப்படுதல் நிலையத்தில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் .

கொரோனா பரவலை அடுத்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் வைத்து தம்மை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக தொழிற்சாலைகளின் பணியாளர்கள் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நிராகரித்திருக்கிறார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாளர்கள் 90 பேர் இது தொடர்பான முறைபாட்டை மனித உரிமை ஆணைக்குழுவில் அண்மையில் பதிவு செய்திருந்தனர்.

இதன்படி கொரோனா பரவலை அடுத்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையின்போது தம்மை உரிய முறையில் படையினர் கையாளவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.

இதன்போது தம்மை மனிதாபிமானமற்ற முறையில் படையினர் நடத்தியதாகவும், தனிமைப்படுத்தல் விதிகளுக்கு எதிராகவும் நடத்தினர்.

அவ்வாறு செயற்பட்ட படையினர் தொடர்பான தகவல்களை தம்மால் எதிர்காலத்தில் தரமுடியும் என்றும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இதனை மறுத்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் போது முன்கூட்டியே அவர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்து அவர்களை தயாராகும்படி கூறிய பின்னரே அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

சில இடங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளின் போது மக்கள் கூடுதலான நேரங்களை அதற்காக எடுத்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

எனினும் படையினர் இலங்கை மக்களை சகோதர, சகோதரிகளை போலவே இந்த விடயத்தில் நடத்தியதாக இராணுவ தளபதி தெரிவித்திருக்கிறார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more