ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்ச்சி திடட்டுமானது உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்பட்டதுடன் தலைமை சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஜனாதிபதி வரவேற்றார்.
அதனடிப்படையில் ஜனாதிபதியினால் சிகப்பு சந்தன மரக்கன்றொன்று நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.