பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஸவினால் ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33 ஆவது பிரிவில் காணப்படுகின்றன ஜனாதிபதி இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உள்ள கொரோனா வைரஸ் பரவலினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகவியல் சவால்களுக்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்ற பொருளாதார திட்டமொன்றை உருவாக்குவதே இந்த செயலணியின் நோக்காக காணப்படுகின்றது.
அத்துடன் உற்பத்தி பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டல்களை தயாரிப்பதும் இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான நோக்காகும்.
உள்நாட்டு கைத்தொழிலாளர்கள்,முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிக்கும் நாட்டு மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க ஒருங்கிணைந்த திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது,
மக்கள் வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருவதற்கு சுகாதார மற்றும் கல்வி மற்றும் சுகாதார செயலணிகளின் செயற்பாடுகளையும் கவனத்திற் கொண்டு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைங்கும் பொறுப்பும் இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது,
எந்தவொரு அரச ஊழியரோ,அமைச்சோ,அரச திணைக்களமோ ,அரச கூட்டுத்தாபனமோ அல்லது நிறுவனமொன்றுக்கு செயலணியினால் விதிக்கப்படுகின்றன கடமையினை புறக்கணித்தாலோ அல்லது தாமதப்படுத்தினால் அது குறித்த ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2020 ஜனவாரி 24 மற்றும்,மார்ச் 23 ,மார்ச் 24 ஆம் திகதிகளில் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிகள் இதன் மூலம் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஜனாதிபதி செயலணியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது