T24 Tamil Media
இலங்கை

ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடை!

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்டைத் தடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிம் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது.

இதற்கமைய 20 மைக்ரோனிற்குக் குறைவான பொலித்தீன் உற்பத்திகளை தடைசெய்தல், பொலித்தீன்களினாலான உணவு மற்றும் உற்பத்திகளைத் தடை செய்தல், பொலித்தினை திறந்த நிலப்பரப்பில் எரிப்பதைத் தடை செய்தல் போன்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

இந்நிலையில் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன்களுக்குப் பதியாக மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் முகாமைத்துவம் தொடர்பான பங்குதார நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் உடன்பாடுகளுக்கமைய ஒருமுறை பயன்படுத்தி அகற்றும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி Poly Ethylene Terephthalate(PET மற்றும் Poly Vinyl Chloride (PVC) undnata இரசாயனப் பொருட்களோ கிருமிநாசினிகளைப் பொதியிடல் தடை மாற்று வழி முறையாக கண்ணாடி அல்லது வேறு மூலப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட பொதிகளைப் பயன்படுத்தும்.20 மில்லிமீற்றர் 20 கிரார்களுக்குக் குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்பட்ட சிறிய பக்கெட்டுக்களைத் தடைசெய்தல், உணவு மற்றும் மருந்துகள் தவிர்த்து, மாற்று வழிமுறையாக 100 மில்லிமீற்றர் அல்லது 100 கிராம் அல்லது அதற்கு அதிகமான பைக்கெட்டுக்களைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அனைத்துவித பிளாஸ்டிக் உற்பத்திகளின் மீன் பிரயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் சிபார்சு செய்யப்பட்ட பிளாஸ்ரிக்கை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more