T24 Tamil Media
இலங்கை

ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை!சபையில் சம்பந்தன் கொந்தளிப்பு.

ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றகையில்,

ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டியது அவசியம்.

அத்தோடு ஒரு ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை என்றும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தத்தினை எதிர்ப்பதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சரியான கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் முடிவுகள் எடுக்கப்படும். இந்த நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசியலமைப்பு 1994 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டது குறிப்பாக தமிழ் மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை தொடர்ந்து வழங்கியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும், இல்லையென்றால் அதை தாங்கள் நிராகரிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more