T24 Tamil Media
இலங்கை

ஜனநாயகத்திற்கு முரணாக செயற்படும் அரசாங்கம் – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு.

பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சட்டத்தரணி சிறால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களின் மீது எந்தவித அக்கறையும் இன்றி செயற்படுகின்றது. நாட்டில் தற்போது பசளை தட்டுப்பாடு பொருட்களின் விலை அதிகரிப்பு, ஒழுங்கான வருமானம் இன்மை, தொழில் வாய்ப்பு இன்மை போன்றவற்றுடன், ஏற்கனவே இருந்த தொழிலும் சிலருக்கு இல்லாமல்போயுள்ள நிலையில், அரசாங்கம் மக்களுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக சிந்திக்காது இராணுவ ஆட்சியை முன்னெடுப்பது தொடர்பிலே அக்கறை செலுத்தி வருகின்றது.

எமது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தற்போது பொலிஸார் சேகரித்து வருகின்றனர். அந்த தகவல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டு பாதுகாப்பாக பேணப்படுவதை விடுத்து, அதற்கு மாறாக இதனூடாக பழிவாங்கல்களை முன்னெடுக்க முயற்சிக்ககூடாது.

பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும். இது சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்கு சிக்கலை தோற்றுவிக்ககூடும் என மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more