மாளிகாவத்தை, ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் விகாராதிபதியான ஊவதென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரி – 56 ரக துப்பாக்கிகள் இரண்டு, 50பைக் குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைகுள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இவருக்கு ஆயுள் தண்டனைவழங்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்படி மாளிகாவத்தை, ஸ்ரீ போதிராஜாராம விகாரையை சுற்றிவளைத்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட ஆயுதங்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.