ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்படாதுவிடின் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்காக சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய முறைமைகளை பின்பற்றாது பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து பேருந்துகளினதும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு பயணிக்கும் பேருந்துகளின் அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.