சிமெந்திற்கான வரியை அதிகரிக்கும் அரசின் தீர்மானத்தால் சிமெந்து பைக்கட் ஒன்றின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக சிமெந்து விநியோகத்தில் ஏகபோகத்தை உருவாக வாய்ப்புள்ளதாக பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதாகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சிமெந்து பவுடர் மற்றும் பொதியின் தரத்தில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதாகே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.