சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டுமென காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சில கொள்ளைக் கும்பல்கள் தங்களை காவற்துறையினர் என அடையாளப்படுத்தி சில பிரதேசங்களில் கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டர்.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் யிலங்குளம், புளியங்குளம் ஆகிய இரண்டு பகுதிகளில் சுமார் 5 இலட்சம் வரை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் காவற்துறைஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.