T24 Tamil Media
இலங்கை

சிங்கள அரசுகளினாலேயே ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது – சுரேஸ் வலியுறுத்து.

சிங்கள அரசுகளின் செயற்பாடுகளினாலேயே தமிழ் மக்கள் தனி ஈழக்கோரிக்கையை முன்வைத்தார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதi முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் தலைவர்கள் தனி நாட்டுக்கோரிக்கை மன நிலையில் இருந்து மாறவேண்டும். அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று கூறியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்

சிங்கள அரசுகளின் செயற்பாடுகளினாலேயே தமிழ் மக்கள் தனி ஈழக்கோரிக்கையை முன்வைத்தார்கள்.

தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் சமஸ்டி தீர்வு ஊடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தனி நாட்டுக் கோரிக்கை 1976 ஆம் ஆண்டுகளிலேயே வந்தது. இந்த தனி நாட்டுக் கோரிக்கையை வட்டுக்கோடடை தீர்மானத்தின் ஊடாகவே பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை தந்தை செல்வநாயகமும் தமிழர் விடுதலைக் கூடடணியுமே கொண்டுவந்தது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது ஆரம்பகாலத்தில் இருந்த ஏனைய போராடட இயக்கங்களோ கோரவில்லை.

ஜனநாயக ரீதியாக போராடிய தமிழ் தலைவர்களே தனிநாட்டுக் கோரிக்கையை கோரினார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு கோரினார்கள் என்பதற்கு பல காரணங்களும் உண்டு. அன்றைய காலத்தில் இருந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக செய்து கொள்ளப்படட பல உடன்படிக்கைகளை கிழித்தெறிந்தார்கள்.

குறிப்பாக டட்லி சேனாநாயக்க உடன்படிக்கை, பண்டாரநாயக்க ஒப்பந்தம் என உடன்படிக்கைகளை அப்போது ஆடசியில் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கடசி இந்த இரண்டு அரசுகளும் உடன்படிக்கைகளை கிழித்தெறிந்தனர்.

இலங்கை தமிழர்கள் மீது சிங்கள அரசு திட்டமிடட வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரச நிர்வாகத்தில் தனிச் சிங்கள மொழி மட்டுமே பின்பற்றப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. அதன் ஊடாக தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டு அதில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இதனால் தமிழ் மக்களின் தனித்தன்மை கேள்விக்குறியாகியது. எனவே தமிழர்கள் தமது இறையாண்மையை மீள பெற வேண்டும் என்றே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தனர்.

தமிழர்கள் இந்த நாட்டில் தனி நாட்டுக்கு கோரிக்கையை முன்வைக்க பிரதான காரணம் இலங்கை அரசின் கடும் போக்கே அதனாலேயே ஈழத்தமிழர்கள் தனி ஈழக்கோரிக்கையை முன்வைத்தார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more