வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள சிகை அலங்காரம் செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தொற்று நோயியல் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட நபர்களில் இவரும் ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த நாட்களில் தனது தொழில் இடத்தில் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே, அவரில் இருந்து ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.