தேசிய மத ஒற்றுமைக்காக சமாதானத்தை வளர்ப்போம் என்ற தொனிப் பொருளில் கொழும்பு கொம்பனி வீதி யங் ஐலண்டர்ஸ் விளையாட்டுக்கழக நலன்புரிச் சங்கம் இரத்ததான முகாம் ஒன்றை நடத்தியிருந்தது.
இந் நிகழ்வு கொம்பனி வீதி டிமெல்பார்க் கட்டிடத்தில்
கழகத்தின் தலைவர் காலித் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஐ.எம். இக்பால் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் கொம்பனி வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரியும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மூவினத்தையும் சேர்ந்த மக்களுடன் பொலிஸாரும் இணைந்து இரத்த தானம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.