கொழும்பு திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினரர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் பிலியந்தல மற்றும் நுகேகொட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 3 கிலோ 250 கிராம் ஹெரோயினுடன் கொழும்பு திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மோட்டர் சைக்கிளில் ஹெரோயினைக் கொண்டு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் காவற்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன் இவ்வாறு கைது செய்யப்படடவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய சந்தேகநபர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.