சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனாத் தொற்றுள்ளதா என்பது தொடர்பில் கண்டறியும் பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை மருத்துவ பரிசோதனையில் இருந்து கண்டறிப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.