கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்துடன், சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி மேலதிக விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சாரதியை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.