சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கடமைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடமைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.