யாழ்ப்பாணம் பருத்தித்துறை கோட்டக் கல்வி அலுவலக காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி கிழக்கு கிழவி தோட்டத்தைச் சேர்ந்த 59 வயதான பத்மநாதன் தெய்வேந்திரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரவு நேரக் கடமையில் இருந்த காவலாளி மறுநாள் காலையில் அவர் வழமையாக படுத்துறங்கும் கட்டிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.