கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கும் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தாமதிக்காமல் பதிவு செய்ய வேண்டும் என மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய தொம்பே பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இயங்கிய சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வாடகை அடிப்படைக்கமைய பெற்றுக்கொள்ளப்பட்ட வீடு ஒன்றில் இவ்வாறு மதுபான தயாரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடு பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.
இவ்வாறு பதிவு செய்யாமல் கொழும்பில் தற்காலிகமாக குடியிருக்கும் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது