T24 Tamil Media
இலங்கை

கொரோனா வைரஸ் பரிசோதனைகள் போதாது – முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விமர்சனம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விமர்சித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியது எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கொவிட் – 19 கொரோனா வைரஸ் நபர்களுக்கு இடையிலான தொடர்புகள் மூலம் மிக வேகமாகப் பரவுகின்றது.

ஆகவே தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த வேளையில், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியிருந்தனர்.

உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அளவு எமது நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்றே மிக முக்கிய தேவையாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more