T24 Tamil Media
இலங்கை

கொரோனா பரவலின் எதிரொளி – தேர்தலிற்கான செலவுகள் அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத்தாக்கத்தையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிற்கான செலவுகள் அதிகரிக்கலாமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் மொத்த செலவீனம், இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமாக அதிகரிக்கும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம்; பொதுத் தேர்தலுக்கான செலவீனம் 5 பில்லியனாக அமையுமென தேர்தல் செயலகம் மதிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நாட்டின் நிலவும் இச்சூழ்நிலை காரணமாக தேர்தலுக்கான செலவை கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்தலுக்கான செலவு 7 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என தேர்தல்கள் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகம் சமர்ப்பித்த மதிப்பீட்டின் அடிப்படையில் திறைசேரி ஏற்கனவே 7 பில்லியனை தேர்தலுக்காக ஒதுக்கியிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கதிற்கு முன்னர் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்ததால், மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது செலவுகள் அதிகரிக்கும் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுமார் 700 தேர்தல் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக செயலகம் ஏற்கனவே 50,000 முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் தொற்றுநீக்கி ஆகியவற்றை இறக்குமதி செய்திருந்தது.

தேர்தல் தொடர்பான அடிப்படை பணிகள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரட்;நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more