T24 Tamil Media
இலங்கை

கொரோனா நோயாளிகள் பயணித்த பேருந்துகள்! யாழ்ப்பாணம் சென்ற பேருந்தும் கண்டுபிடிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் பயணித்த 6 பேருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார்.

நாங்கள் அடையாளம் கண்டுள்ள பேருந்துகள் பல உள்ளன. அதில் ND 4890 என்ற இலக்கம் கொண்ட கொழும்பு – மெதகம சென்ற பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.

அத்துடன் ND 2350 என்ற இலக்கம் கொண்ட மாக்கும்புர – காலி சென்ற பேருந்து ஒன்றிலும் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.அதேபோல் ND 549 – என்ற இலக்கம் கொண்ட அம்பலங்கொட பேருந்தில் கடவத்தை சென்ற கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.

அத்துடன் கொழும்பு – யாழ்ப்பாணம் சென்ற 6503 என்ற இலக்கம் கொண்ட பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் பயணித்துள்ளார்.எல்பிட்டிய – கொழும்பு சென்ற ND 9788 என்ற இலக்கம் கொண்ட பேருந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலி – கடவத்தை சென்ற NF 7515 என்ற பேருந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளும் கண்கானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக சொகுசு பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னர் அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more