கடந்த சில நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தின் தாவடிப் பகுதி திறந்து விடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவவதாக கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அடையாளங்காணப்பட்டதையடுத்து அவரின் சொந்த ஊரான தாவடி மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டிருந்தது.
தாவடிக்கிராமத்தில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளங்காணப்படாதையடுத்து தாவடிக்கிராமத்தை திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.