கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வரை 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, 219 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 151 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.