கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார்.
இன்றைய தினத்தில் மாத்திரம் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் 5 பேர் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் இனங்காணப்பட்டுள்ளனர் என்பதோடு 6 ஆவது நபர் தற்போது இரத்தினபுரியில் அடையாளங்காணப்பட்டுள்ளார்.