தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவில் பதிவினை மேற்கொள்ளாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த தகவலினை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தி செல்ல வேண்டுமானால் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் என அந்த அதிகாரசபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.