காவற்துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்கள் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காவல் துறையினரின் இந்த விசேட நடவடிக்கைக்காக 45,000 காவல் துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.