T24 Tamil Media
இலங்கை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸ காவற்துறையினர் தாக்கியத்தின் காரணத்தினால் உயிரிழப்பு.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸ காவற்துறையினர் தாக்கியத்தின் காரணத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் விசாரமாய் மேற்கொள்வதற்காக காவற்துறை குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இதற்கு பின் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நபர் காவற்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி குறித்த நபர் மார்ச் மாதம் 21 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மார்ச் 25 ஆம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

குறித்த நபரை நேற்று முன்தினம் அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more