2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு அவர்களின் நலன் கருதி மாட்ட ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொற்றுக்கு உள்ளான பரீட்சை எழுதும் மாணவர்கள் இந்த பரீட்சை நிலயைங்களில் பரீட்சை எழுதலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அத்துடன்எதிர்வரும் மார்ச் 01 முதல் 11 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.