ஹம்பலாந்தோட்டை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் விளைவால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.