T24 Tamil Media
இலங்கை

கிளிநொச்சியில் எவருக்கும் கொரோனா இல்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லையென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.


முழங்காவில் நாச்சிக்குடா கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 13ஆம் திகதி ஜா-எல, மட்டக்குளி, ராகம பிரதேசங்களில் இருந்து 32 பேர் மேற்படி கடற்படை தனிமைப்படுத்துல் நிலையத்திற்கு அiழைத்துவரப்பட்டிருந்தனர்.


இவர்களில் ஆறுபேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான செய்தி பரவியதனை அடுத்து அவர்களிடத்தே அச்சம் ஏற்பட்டது.


எனவே இது தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைத் தவிர்க்கும் வகையில் மாவட்ட அரச அதிபரிடம் ஊடகவியாலர்கள் வினவிய போதே அவர் இவ்விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகிறது. எனவே கிளிநொச்சி மாவட்ட மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more