T24 Tamil Media
இலங்கை

கிண்ணியாவில் சீனி 50 கிலோ கிராம் நிறையுடைய 120 மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டது!

திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு பிரதேசத்தில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கிராம் நிறையுடைய 120 மூடைகள் சீனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரல தெரிவித்தார்.

இதற்கமைய இரகசியமாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டு குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பிறிதொரு பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையில் குறித்த 120 சீனி மூடைகளும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் உரியநபருக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின்படி உரிய அதிகாரசபையால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக விற்கப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடு பொதுமக்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு அவ்வாறான பிரதேசங்களை இனங்கண்டு சுற்றிவளைப்புகள் மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாம் அறிவுறுத்தல் வழங்கியதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் கையிருப்பில் பொருட்களை வைத்துக்கொண்டு அவற்றை மொத்த ,சில்லறை அடிப்படையில் விற்பனை செய்யாமல் செயற்கையான முறையில் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றை பதுக்கி வைத்திருப்பது அனுமதிக்க முடியாது.

மக்கள் பொருளாதார அசௌகரியங்களுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருவதாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இவ்வாறான சுற்றிவளைப்புகள் மாவட்டத்தினுடைய பல்வேறு பிரதேசங்களிலும் தொடராக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பாவனையாளர்களது நலன் தொடர்பில் கூடிய அக்கறை கொண்டு இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல் தம்மால் இது தொடர்பில் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற குறித்த சுற்றிவளைப்பின் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலுவலக விசாரணை உத்தியோகத்தர் தனசேகரன் வசந்தசேகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more