கொரோன பரவும் அபாயத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் காெழும்பு மெனிங் சந்தை நாளை புதன்கிழமை முதல் மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.
கொராேனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை முறைமைகளை பின்பற்றியே மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ரொஷான் குரே தெரிவித்தார்.
கொராேனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை முறைமைகளை பின்பற்றிக்கொண்டு மூடப்பட்டிருக்கும் காெழும்பு மெனிங் சந்தை நாளை புதன் கிழமை முதல் மீண்டும் தொடர்ந்து மேற்கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதன்போது நாளாந்தம் மெனிங் சந்தைக்கு வருபவர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முறையான நடைமுறைக்கு சாத்தயமான திட்ட்ங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் மெனிங் சந்தையில் சந்தை நடவைக்கைகளில் ஈடுபடுபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் எவரும் சந்தைக்குள் உள்நுளைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதேபோன்று சந்தைக்குள் நுளையும்போது கைகளை சுத்தம் செய்துகொள்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படிருக்கின்றன. அத்துடன் சந்தைக்குள் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு மீட்டர் தூர இடைவெளியை பேணுவது தொடர்பாக தொடர்ந்து அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்டிருந்த பொருளாதார வர்த்தக நிலையங்களை காலை 7 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.