ஹபரணை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் முகநூல் ஊடாக அழைப்பு விடுத்து விருந்து நடத்திய பெண் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வு தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தினை நோக்கி காவற்துறையினர் சாதனை செய்து அவர்களை கைது செய்துள்ளதுடன் ஹபரணை குளக்கரையில் அமைந்துள்ள விடுதியில் ஒன்றிலயே இந்த முகநூல் விருந்து நடைபெற்றுள்ளது.
அத்துடன் 29 வயதான பெண்ணொருவரும், 22 முதல் 28 வயதான 16 இளைஞர்களும் இணைந்து குறித்த இந்த விருந்தை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஹபரணை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.