கம்பளை மாவட்டத்தின் சில்வர்ஸ்டார் தல்பிட்டிய பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் கிணற்றை மூடியிருந்த தகரத்தின் மீது ஏறிய நிலையில் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இச் சம்பவத்தில் கம்பளை அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.