வவுனியாவில் குளங்களுக்கான காணிகளை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா அலுவலகத்தினால் கமநல அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரமும் காணி மீளப்பெறுகை சட்டத்திற்கமையவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குளங்களை அத்துமீறி ஆக்கிரமித்து, வயல் நிலங்களை மேட்டு நிலங்களாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், காவல்துறையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் நேரடித் தலையீட்டில் அகற்றப்பட்டுத்தப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், பட்டாணிச்சூர் புளியங்குளம், கோவில் குளம் ,வேப்பங்குளம் , ஓயார் சின்னக்குளம் ஆகிய 4 குளங்களில் போடப்பட்டிருந்த வேலிகள் அகற்றப்பட்டன.