காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிப் போராடிய தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61 என்ற தாயே ஆவர்
குறித்த தாயின் மகன் தருமகுலநாதன் கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தனது மகனை மேட்டு தருமாறு கோரி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் தாய் கலந்து கொண்டிருந்தத்துடன் இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.