வாடகைக்கு இயங்கும் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றில் பயணிக்கக் கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த காவல்த்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் பரவலை நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன்படி, வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றில் சாரதியைத் தவிர இருவர் மட்டுமே பயணிக்க முடியும் என காவல்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது பொதுப் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளமை கடந்த சில நாடக்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது, அது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் குறித்த சுற்றுநிரூபத்தை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என காவல்த்துறையினர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.