T24 Tamil Media
இலங்கை

கர்ப்பவதியான உத்தியோகத்தருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர்ந்தும் பேருந்தில் பயணித்தமையால் குழந்தை இறந்துள்ளதுடன் அவரும் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது

நாளாந்த போக்குவரத்துச் சிரமம் தொடர்பில் சுட்டிக்காட்டி இடமாற்ற அனுமதி கோரியபோதிலும் பிரதேச செயலர் உடன்பட மறுத்தமையாலேயே அவருக்கும் குழந்தைக்கும் இவ்வாறான அவல நிலை ஏற்பட்டதாக சக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாவட்டச் செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கரைதுறைபற்று பிரதேச செயலக திட்டமிடல் கிளையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த குறித்த பெண் என்பவருக்கு இடம் பெற்ற துன்பியல் சம்பவம் தொடர்பில் உடனடியாக தங்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.

யாழ்ப்பாணத்தினை நிரந்தர வதிவிடமாக கொண்ட குறித்த பெண் அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே அவருக்கு 02 குழந்தைகள் இருப்பதன் காரணமாக தினமும் யாழ்ப்பாணத்திலிருந்து கடமைக்கு கரைதுறைபற்று பிரதேச செயலகத்துக்கு வந்து சென்றார்.

தன்னுடைய உடல்நிலையினை கருத்தில்கொண்டு தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவதற்காக அனுமதிகோரி பிரதேச செயலாளரிடம் 02 தடவைகள் விண்ணப்பிருந்தார். இருந்தபோதும் பிரதேச செயலாளர் அவரது கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் 05.11. 2020 இல் குழந்தை கிடைக்கும் நிலையில் நிறைமாத கர்பிணியாக இம் மாதம் 02.10. 2020 வரை அலுவலகத்திற்கு சமூகமளித்திருந்தார். தற்போது கடந்த 09.10.2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் போக்குவரத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக வயிற்றில் குழந்தை இறந்துள்ளதாக வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் குழந்தையினை வெளியேற்றுவதற்காக தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தினால் சக ஊழியர்களாகிய நாம் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையினையும் அடைந்துள்ளதோடு மன அழுத்தத்துக்கும் ஆளாகியுள்ளோம்.

எனவே பிரதேச செயலாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடு காரணமாக ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதுடன் தாயும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையினையும் தோற்றுவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் பிறிதொரு உத்தியோகத்தருக்கு இத்தகைய நிலை ஏற்படாத வகையில் நிர்வாக ரீதியான பொருத்தமான நடவடிக்கையினை எடுக்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்று குறிப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தின் பிரதி வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more