நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டத்தில், இந்திய அரசின் உதவியுடன் 20 வீடுகளுக்கான வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் வீடமைப்பு வேலைகள் அனைத்தும் விரைவாக இடம்பெற்று வந்துள்ளஸ்ரீ நிலையில் தற்போதைய அரசியல் மாற்றத்தின் பின்னர் இத் திட்டமானது முழுவதுமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அறுபது வீதமான கட்டுமானப் பணிகளே இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், மீதியாக உள்ள வேலைகளை நிறைவு செய்து தருமாறு கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கந்தப்பளை பார்க் தோட்ட வீட்டுத்திட்ட நிர்வாகக் குழு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி குறித்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.