வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
குவைத் நாட்டில் இருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள் என தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மிகவும் பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்துடனே செயற்படுகின்றது என மேலும் தெரிவித்தார்.