கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 22 விமான சேவைகள் வழங்கி சாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் 1,504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் 943 பேர் இக் காலப்பகுதியில், 12 விமான சேவைகள் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை 561 பயணிகள் , 10 விமான சேவைகள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் விமான நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார் .
மேலும் கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரே நாளில் அதிகளவான சேவைகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .