புத்தளம் ரயில் பாதையில் குரன மற்றும் நீர்கொழும்பு இடையேயான ரயில் பாதை
பெப்ரவரி 26 காலை 8.00 மணிமுதல் பெப்ரவரி 28 இரவு 8.30 மணிவரை மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குரன மற்றும் நீர்கொழும்பு ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை பாதையை உருவாக்குவதன் அடிப்படையில் பாதையை தடை செய்வதற்கு இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் காரணமாக கட்டுநாயக்க மற்றும் புத்தளம் இடையேயான ரயில் சேவை அந்தக் காலகட்டத்தில் இயக்கப்படாது என்பதுடன்
கொழும்பு, கோட்டை தொடக்கம் கட்டுநாயக்க ரயில் நிலையங்களுக்கு மாத்திரமே புத்தளம் பாதையில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .