வடமராட்சிக்கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப்பகுதியில் கேரளா கஞ்சாவுடன் மூவர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருப்பதாக மருதங்கேணி காவல்துறைையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம் பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று பொதி கஞ்சாவுடனேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவை குறைந்தது 150 கிலோ வரை இருக்கும் என்றும் காவல்த்துறையினர் தெரிவிக்கின்றார்கள்.