சேவையில் இருந்து ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
தெரணியகல ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளைக் கண்காணிப்பதற்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறித்த பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது எடுக்கப்பட்ட சில தீர்மானங்களின் அடிப்படையில் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.