ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரம் உடனடியாக தாக்கல் செயப்படுமென வெளியான தகவலை சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்துள்ளது.
குறித்த தகவலினை சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தகவல் தொடர்பான அனைத்து தகவல்களும் 12 பேர் அடங்கிய குழுவினால் தொடர்ந்தும் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆராயப்படுவதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் முழுமையாக ஆராயப்படாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட மாட்டதெனவும் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.