T24 Tamil Media
இலங்கை

எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தவில்லை – இராணுவத்தளபதி

நாட்டிலுள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தவில்லையென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக போலிப்பிரசாரங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…..

தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்காக பாடசாலைகள் கேட்டு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை.

அனைத்து படை வீரர்களும் முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத்துறையினரால் வலியுறுத்தப்படுகின்ற சமூக இடைவெளியைப் பேணுவதில் சிக்கல் ஏற்படும் என்பதன் காரணமாக பாதுகாப்பு படையினர் தங்கக்கூடிய முகாம்களை அமைப்பதற்கே சில சிறிய பாடசாலைகளிடம் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தோம்.

தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்த பாடசாலையும் பயன்படுத்தப்படவில்லை என்று உறுதியாகக் கூறுகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் அநாவசியமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
என்னிடமும் இது தொடர்பிலும் சிலர் வினவினர்.

எந்தவொரு சந்தப்பத்திலும் பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக்க நாம் எதிர்பார்க்கவில்லை.

எனினும் நாம் கடந்த இரு தினங்களில் சிறிய பாடசாலைகள் குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு அருகில் காணப்படும் சில பாடசாலைகளைத் தருமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

அவ்வாறு வழங்கக்கூடிய பாடசாலை எவை என்பது பற்றி கல்வி அமைச்சர் எமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இரு தினங்களில் அனைத்து இராணுவ வீரர்களையும் அழைப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் இதற்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமையில் சமூக இடைவெளியைப் பேணுவது அத்தியாவசியமானதாகும்.
எனினும் எம்மால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குறிப்பிட்ட அளவொன்று உள்ளது.

சில வீரர்கள் சேவைக்காக வெளியில் சென்றாலும் ஏனைய அனைவரும் முகாம்களிலேயே தங்க வேண்டியுள்ளது.

எனவே சுகாதாரத்துறையினரால் வலியுறுத்தப்படும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு எமக்கு முகாம்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதற்காக வேறு இடங்களை இனங்காண வேண்டியுள்ளது. அதற்கமைய சில இடங்களில் எம்மால் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு அப்பால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய முகாம்கள் காணப்பட்டால் இராணுவ வீரர்களை தங்க வைப்பதற்காக மாத்திரமே எம்மால் சில பாடசாலைகள் கோரப்பட்டுள்ளன.

எனவே தனிமைப்படுத்தல் நிலையம் என்பது பாடசாலைகளில் அமைக்கப்பட வேண்டியவையல்ல. இதனை எண்ணி மக்கள் அநாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை.
எம்மால் முகாம்களை அமைக்க முடியாமல் போனாலும் ஒருபோதும் பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எதிர்பார்க்கவில்லை என்றார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more