T24 Tamil Media
இலங்கை

ஊரடங்கு நேரத்திலும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

ஊரடங்கு சட்ட நேரத்தில் சீவல் தொழிலாளர்களினால் சேகரிக்கப்படும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பனை அபிவிருத்தி சபை மற்றும் கலால் திணைக்களம், சுகாதார பரிசோதகர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடலின் முடிவில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன குறிப்பாக சீவல் தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் அவர்களால் சேகரிக்கப்படும் பதநீரை விற்பனை செய்ய முடியாதவாறு அரசாங்கத்தினால் சகல தவறணைகளும் மூடப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.

சீவல் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இன்றையதினம் குறித்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் வரை சீவல் தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் பதநீர் அந்தந்த பிரதேசங்களில் உள்ள சங்கங்கள் பெற்று அவர்கள் அதனை போத்தலில் அடைக்கவுள்ளதோடு அத்தோடு மிகுதி பதநீரை மதுசார தயாரிபுக்காக கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதாகவும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

ஊரடங்கு வேளையில் பதநீர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்குரிய அனுமதிகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனுமதிகள் குறித்த வரையறையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more