கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சில நபர்களை ஏற்றிச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வரக்காபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
வரக்காபொலவில் பேருந்து ஒன்றும்மரக்கறி ஏற்றிச்சென்ற சிற்றூந்து ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூன்று கடற்படைச்சிப்பாய்களும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரக்காபொல காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.