இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம் நேற்று இரவு 8 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா,களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல காவல்த்துறை பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட காவல்த்துறை பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று காவல் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்த்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் நேற்று இரவு 8 மணி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 27 ஆம் திகதி காலை தளர்த்தப்படவுள்ளது.
இவை தவிர கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் நடவடிக்கைகளுக்கு முற்றாகத்க் தடைவிதிக்கப்பட்டுள்ளது